உத்தேச 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை நடத்துவதற்கான தினத்தை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கமைய, திருத்தப்பட்ட திகதிகள் அடுத்தவாரம் முறையாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பை முன்வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.
மாணவர்களினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கோரிக்கைக்கமைய பரீட்சையை ஒத்திவைத்தால், 2024 ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்க நேரிடும் என்றும் அவ்வாறு ஒத்திவைத்தால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்திரமின்றி அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் இல்லாமல் போக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.