மின்சாரம், பெற்றோலியம் உட்பட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்!

editor 2

மின்சாரம் வழங்கல், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் உட்பட்ட சில சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சாரம் வழங்கல், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் மருந்தகங்கள், தாதியர் சேவை, நோயாளர் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவையான அனைத்துச் சேவைகளும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதியே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article