உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள மூவர் கொண்ட குழுவை கத்தோலிக்க திருச்சபை மீண்டும் நிராகரித்துள்ளது.
நாங்கள் சிஐடியின் விசாரணைகளையே கோருகி;ன்றோம்,இந்த விசாரணைகள் வெளிப்படைத்தன்மை பக்கச்சார்பின்மை போன்ற விடயங்களை உறுதி செய்வதற்கா சர்வதேச சமூகத்தி;ன் ஏதாவதொரு கண்காணிப்பு அவசியம் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் பெர்ணாண்டோ சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
இதற்காக உயிர்த்தஞாயிறு தாக்குல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளை இடம்மாற்றப்பட்ட 20 சிஐடி விசாரணையாளர்களிடம் விசாரணைகளை ஒப்படைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல ஆணைக்குழுக்கள் விசாரணை குழுக்கள் ஆனால் அரசியல் தலையீடுகள் அவற்றை பாதித்துள்ளன,என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறிபெர்ணாண்டோ எங்களிற்கு இந்த ஆணைக்குழுகுறித்து திருப்தியில்லை உண்மை வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது முழு உலகிற்கும் இது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.