முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றபோது மேலும் சில எச்சங்கள் மீட்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நான்காம் நாள் அகழ்வுப்பணிகள் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலானகுழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால்,சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வின்போது துப்பாக்கிச் சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன தடயப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன.