பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் உயிரிழந் துள்ளார்.
வேல்ஸில் அமைந்துள்ள அருவியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா விமானியாக உள்ளார்.
இவர், குறித்த அருவியில் இரண்டு சிறார்கள் உயிருக்கு போராடு வதை கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
பின்னர் சிறார்கள் தண்ணீரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு ப்பாற்றப்பட்டபோதிலும் மோகனநீதன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பொலிஸார், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அவசர சேவை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் மோகனநீதனின் உடலை உடனடியாககண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் அவரது சடலம் நீருக்கடியில் கமெரா மூலம் இனங்கா ணப்பட்டு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.