வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

editor 2

காங்கேசன்துறை, திருகோணமலை, புத்தளம் உட்பட்ட கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அவதானமாக செயற்படுமாறு இலங்கை வளிமணிடலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-65) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். மேலும் தகவலுக்கு meteo.gov.lk 117ஐ அழைக்கவும்.

Share This Article