இந்திய மீனவர்கள் 15 பேர் கைது!

editor 2

வடக்கு மற்றும் கிழக்கு அண்மித்த கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டை அண்மித்த கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் விசேட ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கமைவாக கடந்த 25 ஆம் திகதி மற்றும் 26 ஆம் திகதி திருகோணமலை, லங்காப்பட்டினம், குச்சவெளி மற்றும் யாழ், சளை அண்மித்த கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மின் உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது 06 டிங்கி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 38 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் திருகோணமலை, ஈச்சலம்பற்று, குச்சவெளி மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, காட்பே, குச்சவெளி மற்றும் யாழ்ப்பாணம் மீன்பிடி ஆய்வாளர்கள் காரியாலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

Share This Article