புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு விடை காண்பது முன்னெப்போதையும் விட இன்று இன்றியமையாததாக மாறியுள்ளதாகவும் குழுவாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய அரசியல் இயக்கத்தை கூட்டணியாக கருதுவது ஏற்புடையது அல்ல.
இந்த புதிய அரசியல் இயக்கத்திற்காக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரு கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
பல்வேறு வெளியாட்களுடனும் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாகத் தெரிவித்த அவர், எதிர்கால அரசியல் பயணம் குறித்து அங்கு கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடிக்கு பொதுஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புக்கூறுகின்றனர். அந்த பொறுப்பை ஏற்று அனைத்து பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என்றும்அவர் கூறினார்.