தெல்லிப்பழை துர்க்காதேவி தங்கரத உற்சவம் (படங்கள்)

editor 2

தெல்லிப்பழை  துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் நேற்று நடைபெற்றது.

மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து, 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.

துர்க்கையம்பாள் சண்டேஸ்வரியுடன் உள்வீதி ஊடாக வலம் வந்து, தங்கரதத்திலேறி வெளிவீதியில் வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் பங்குகொண்டு அருள் பெற்றனர்.

Share This Article