சுகாதார அதிகாரிகள் குறைந்தபட்சம் வெளியேறவுள்ள மருத்துவர்கள் ஐந்தாயிரம் பேரைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரச்னைகள் நெருக்கடிகளாக மாறும் வரையில் அதிகாரிகள் பொறுப்பில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தனர்.
வெளிநாடு சென்றுள்ள மருத்துவர்களின் சேவையை இரத்து செய்வதாகவும் அவர்களை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதாகவும் பேசும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்கள் இது தொடர்பில் தலையீடு செய்யாமல் அவர்களை அனுப்பி விட்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலைமை தீவிரமடைந்து முழு சுகாதார துறையும் பிளவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக்கூறி இழுத்தடிப்பு செய்யாமல் பிரச்னைகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
கடந்த வருடம் சுமார் ஆயிரத்து 500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி அவர்கள் சென்றுள்ள நாடுகளில் மருத்துவ தொழில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் சுமார் 5 ஆயிரம் மருத்துவர்கள் முதன்மை பட்டப்படிப்பு மற்றும் முதுமானி பட்டப்படிப்புகளை மேற்கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளனர். ஆகவே, மருத்துவ துறையில் திறமைசாலிகள் வெளியேறும் நிலையே இதுவாகும்.
நாட்டில் மருத்து வத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை வேறு எந்தத் துறையிடனும் ஒப்பிட முடியாது. இது அவசர நிலைமையாகும்.
மருத்துவத்துறைக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் முழுமையாக மருத்து வராக சுமார் 7 வருடங்கள் செல்கின்றன.
விசேட மருத்துவராக 10 அல்லது 12 வருடங்கள் செல்கின்றன. இன்று தீர்வை பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தால் பதிலைப் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
வாய் இருக்கிறது என்பதற்காக வெறுமனே புலம்புகின்ற சுகாதார அதிகாரிகள் குறைந்தபட்சம் வெளியேறவுள்ள 5 ஆயிரம் மருத்துவர்களை தக்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.