கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஆசிரியை ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உபஅதிபரும் பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சினிஎன்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த ஆசிரியை தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் வட்டக்கச்சி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
ஏ- 9 நெடுஞ்சாலையில் இருந்து காக்கா கடைச் சந்தியில் இருந்து வட்டக் கச்சிக்கு செல்லும் வீதியில் திரும்பியபோது எதிர்ப்பக்கம் இருந்து வந்த கார் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.