கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிக்கான நிதி கிடைக்கவில்லை!

editor 2

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, புதைகுழி அகழ்வுக்கான நிதியை வழங்குவதாக
அகழ்வுக்கான…

ஜனாதிபதி பணிமனை அறிவித்திருந்ததாக கடந்த வழக்கின்போது காணாமல் போனோர் பணிமனை மன்றில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நிதி கிடைக்காதமையால் உடனடியாக அகழ்வு பணியை மேற்கொள்ளமுடியாது என்றும் நேற்றைய வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்வரும் வழக்கு தவணையின்போது வழக்கில் முன்னிலையாக உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளும் நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article