இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்களை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறு, நடுத்தர உரிமையாளர்கள் மீண்டும் வலுப்பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற அதிகார சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் போது, வங்கி வட்டி விகிதங்கள் 34 சதவீதமாக இருந்ததாகவும், ஆனால் இன்று அவை 16 முதல் 17 சதவீதமாக உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.