பெருந்தோட்ட மக்கள் தொடர்பான மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த சந்திப்பில் தமது கட்சி கலந்துக்கொள்ளாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பிற்கு முன்னரே நுவரெலியாவில் இடம்பெறவுள்ள நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரம், மலையகத்தில் 36 ஆயிரத்து 158 பேர் கழிவறை வசதியின்றி இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.