யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 55 வயதுடைய நபரும், 19 வயதுடைய யுவதி ஒருவரும் தொடர்பிலிருந்த நிலையில், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த இருவரும் மீண்டும் சுன்னாகம் பகுதியிக்கு திரும்பிய நிலையில் யுவதியின் உறவினர்களால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அதன்பின்னர் 55 வயதுடைய ஆண் உயிரிழந்ததுடன் குறித்த யுவதி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தநிலையில் குறித்த யுவதி வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய அவரது தந்தையும் வழக்கின் சான்று பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் யுவதியின் சகோதரரரும், கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில், ஏற்கனவே 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.