கட்சிக்குள் முரண்பாடு என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது – எம்.கே.சிவாஜிலிங்கம்!

editor 2

தமிழ்த் தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் சிறீகாந்தா – சிவாஜிலிங்கம் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிவாஜிலிங்கம் விரைவில் ஊடக சந்திப்பினை நடத்துவார் என்றும் வெளியாகிவரும் செய்திகளில் உண்மையில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


சிவாஜிலிங்கத்தை கட்சியிலிருந்து வெளியேற்றினார் சிறீகாந்தா என்று இணையத்தளங்கள் சிலவற்றில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது.

அதன் தொடராக,

நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகசந்திப்பை நடத்தப்போவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில்,

இது தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கத்தைத் தொடர்புகொண்ட போது,

அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை, ஊடக சந்திப்புத் தொடர்பிலும் ஒருவருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை,

பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடும் சில இணையத்தளங்களவே இவ்வாறான தகவலை பரப்பிவிட்டுள்ளன என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Share This Article