திருகோணமலை – சீனன்குடா விமான பயிற்சி தளத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளகியாதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமான பயிற்சியாளர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் சீனன்குடா விமான பயிற்சி கள்ளூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT 6 ரக விமானம் இன்று முற்பகல் 11:27 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.