அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் என்று நாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றோம். இந்த எச்சரிக்கையை மீறி ஜனாதிபதி செயற்படக்கூடாது.
நாட்டில் தற்போது 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கின்றது. எனவே, அந்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்காக இந்த நாட்டைப் பிளவுபடுத்த ஒருபோதும் இடமளியோம்.” – என்றார்.