ஆபிரிக்க நாடான நைஜர் மீது இராணுவரீதியில் தலையிடுவதற்கு மேற்கு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் திட்டமிடுகின்றனர்.
நைஜரில் கடந்த வாரம் இடம்பெற்ற இராணுவசதிப்புரட்சியை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ள மேற்குஆபிரிக்க நாடுகளின் இராணுவதலைவர்கள் எப்போது எங்கு படையினரை பயன்படுத்துவது என்பது குறித்தும் திட்டமிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலையீட்டை மேற்கொள்வது குறித்த அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன தேவையான வளங்கள் எப்போது எங்கு பயன்படுத்துவது என்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பே இது குறித்து தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே இந்த அமைப்பு நைஜருக்கு எதிராக தடைகளை அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த நெருக்கடியை சமாதான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகளை இந்த அமைப்பு மேற்கொண்டது எனினும் இது பலன் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.