கல்முனை வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம்!

editor 2

வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப் பிரிவு விடுதியில் இருந்து நேற்று (01) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மத்திய முகாம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஏ.சி.எம் ஆபீத் என்ற திருமணமான  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவர் மனநோய் சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம்  நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த  கல்முனை  நீதிமன்ற பதில் நீதிவான்  விசாரணைகளை மேற்கொண்டார். மரணமடைந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு அவர் உத்தரவிட்டார்

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய பல்வேறு  குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article