சுதுமலையில் உண்டியலை உடைத்தவர் பொலிஸாரால் கைது!

editor 2

யாழ். சுதுமலையில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுதுமலையிலுள்ள ஆலயத்தின் உண்டியல் நேற்றுமுன்தினம் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. ஆலய நிர்வாகத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தில் நேற்றுக் கைது செய்துள்ளனர். 

Share This Article