தலைக்கவசத்தால் தாக்கிக் குடும்பஸ்தர் படுகொலை! – பெறாமகன்கள் வெறியாட்டம்

editor 2

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நுவரெலியா – கந்தப்பளையில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தப்பளையைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இதன்போது சாவடைந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சகோதரரின் இரண்டு மகன்களே மது போதையில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரையும் கைது செய்வதற்குப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article