சமிக்ஞையை மக்கள் மீறுவதாலேயே அதிகளவான மரணங்கள்! – ரயில் நிலைய அதிபர் கவலை

editor 2

ரயில் சமிக்ஞையை மீறிச் செல்வதாலேயே அதிகளவு விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன என்று கிளிநொச்சி ரயில் நிலைய அதிபர் புத்திகாமினி பரமசிகாமணி  தெரிவித்தார்.

ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“5 மாதங்களின் பின்னர் மீண்டும் ரயில் சேவை வடக்கில் வழமைபோல் ஆரம்பித்துள்ளது.  ரயில் கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனைப் பொருட்படுத்தாது மீறிச் செல்கின்றனர். இதன் காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். வீதி சமிக்ஞைகளை மதித்து, ரயில் செல்லும்வரை  சில நிமிடங்கள் தாமதித்து செல்வதன் மூலம் உயிர்ச்சேதம், பொருள்சேதம் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ளமுடியும்.” – என்றார். 

Share This Article