யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள வீடொன்றில் பணிபுரிந்தவட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்ற 17 வயதுடைய சிறுமியே, நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக குறித்த சிறுமி வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்தார்.
அவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.