முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைக்கமைய பொங்கல் விழாவுக்கு இன்று சென்ற தமிழர்களைக் குருந்தூர்மலை பௌத்த பிக்கு தலைமையிலான 100 இற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பொங்கல் விழாவுக்குச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி அச்சுறுத்திய பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினருக்கு எதிராகப் பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும், மாறாக பொங்கல் செய்யவிடாது தமிழர்களைப் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர் என்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.