நீண்ட முயற்சியின் பின் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது.
சரியாக ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட நிறைவிலேயே இந்தச் சந்திப்பு இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி ஒருவர் புதிதாகப் பதவியேற்றால் அவர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கு என்பதே சம்பிரதாயமாக இருந்து வருகின்றது. ஆனால், ரணில் ஜனாதிபதியாகி ஒரு வருடமாகியும் அது நடக்கவில்லை. ஒரு வருடமாக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் ரணில். அந்த முயற்சி இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.