ஒன்றரைக் கோடி ரூபாவை முதல் கட்ட இழப்பீடாகச் செலுத்திய மைத்திரி!

editor 2

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவை முதல் கட்ட இழப்பீடாகச் செலுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. குறித்த  உத்தரவுக்கு அமைய, அவர் முதல் கட்டமாக ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவைச் செலுத்தியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97 ஆயிரத்து 500 ரூபா ஓய்வூதியம் பெறுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்  54 ஆயிரத்து 285 ரூபாவை மாதாந்தம் பெறுவதாகவும் அந்தப் பிரேரணையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 10 கோடி ரூபா இழப்பீட்டுத் தொகையில், ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியத்துக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எஞ்சியுள்ள தொகையை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 10 தவணைகளில் வருடாந்தம் 85 இலட்சம் ரூபா வீதம் செலுத்த அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article