கத்திக்குத்தில் குடும்பஸ்தர் மரணம்! – இருவர் கைது

editor 2

உறவினர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கத்திக் குத்தில் முடிந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்., பண்டத்தரிப்பு – பிரான்பற்று முருகன் கோயிலுக்கு அண்மையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இராமச்சந்திரன் ராஜ்குமார் (வயது 35) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

உறவினர்கள் மூவர் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் இருவர் சேர்ந்து குடும்பஸ்தரைக் கத்தியால் குத்தினர். இதில், படுகாயமடைந்த அவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இளவாலை பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Share This Article