முல்லைத்தீவு, மல்லாவி, பாலையடி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு தூக்கத்தில் இருந்த 23வயதான இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது.
இதன் போது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நள்ளிரவு வீட்டின் வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்நுழைந்த மர்மநபர்கள், அறை ஒன்றில் உறக்கத்தில் இருந்த இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
குறித்த உயிரிழந்த நபர் ஒரு கொலைச் சம்பவத்தில் சந்தேகநபராக கைதாகி விளக்கமறியலில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் பிணையில் விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக் கொலை தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.