புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படாமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
எப்போது புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் எனவும் அவர்கள் வினவினர்.
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமை சர்ச்சைக்குரிய விடயமாகும் எனவும், புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படாமல் இருப்பதன் பின்னணி என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.