புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார்.
இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச அண்மையில் நியமிக்கப்பட்டார்.
பதவியேற்ற பின்னர், புதிய விமானப்படைத் தளபதி சம்பிரதாயபூர்வமாக நேற்று ஜனாதிபதியைச் சந்தித்ததுடன் நினைவுப் பரிசையும் கையளித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரையும் புதிய விமானப்படைத் தளபதி சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.