ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்! – அமைச்சர் காஞ்சன திட்டவட்டம்

editor 2

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்கியே தீருவார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.”

– இவ்வாறு அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் மொட்டுக் கட்சி சார்பாகவா அல்லது பொதுவேட்பாளராகவா போட்டியிடுவார் என்பதை ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர்தான் அறியத்தருவோம்.

நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் தலைவர்களில் நாட்டுக்குத் தலைமை தாங்கக் கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. இதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பறைசாற்றிக் காட்டும்.” – என்றார்.

Share This Article