மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கைவைக்க முடியாது என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜூன் 29 தொடக்கம் ஜூலை 3 வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி விடுமுறை வழங்குவது தொடர்பில் நாட்டில் தேவையற்ற கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எவரும் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் எவரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் தெளிவாகக் கூறியுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அஸ்வெசும போன்ற திட்டங்களை அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் உள்ளடக்கக் கூடாது. அனைத்தும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்.” – என்றார்.