ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லாது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இது தொடர்பில் அரச தரப்புக்குள் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், மேலதிக ஆலோசனைக்காக 10 பேரடங்கிய நிபுணர் குழுவொன்று அமைக்கப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.
செலவு கட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்களைக் கருத்தில்கொண்டே ஜனாதிபதி இவ்வாறு சிந்தித்து வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.
மக்கள் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையிலேயே, தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கின்றார்.
எனினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் விடயங்களை மையப்படுத்தியதாகவே இந்தத் தகவல் அமைந்துள்ளது.