டைட்டானிக் கப்பல் சிதைவுகளைப் பார்ப்பதற்காகப் பயணித்த நிலையில் காணாமல் போன டைட்டன் நீர் மூழ்கியிலிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
டைட்டானிக் சிதைவுகளுக்கு அருகில் நீர்மூழ்கியின் சிதைவடைந்த ஐந்து பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக ரியர்அட்மிரல் ஜோன் மகுவர் உறுதிசெய்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு பேரழிவு வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என கருதக்கூடிய விதத்தில் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நீர்மூழ்கி காணாமல்போன சிலநிமிடங்களிலேயே அமெரிக்க கடற்படை ஒருவெடிப்பு என கருதக்கூடிய ஒலியை உணர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு ஐவரை ஏற்றிக்கொண்டு சென்ற நீர்மூழ்கி ஞாயிற்றுக்கிழமை காணாமல்போனமை குறிப்பிடத்தக்கது.