பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மீண்டும் பதவியேற்கலாம் என்று அந்த நாட்டின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தத் தொலைக்காட்சி கூறியவை வருமாறு,
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் (பி. எம். எல்.) கட்சியின் மத்திய பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், கட்சியின் நிறுவனரும், தனது மூத்த சகோதரருமான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பி, மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்கவிருப்பதை மறைமுகமாகத் தெரிவித்தார் என்று அந்தத் தொலைக் காட்சி குறிப்பிட்டுள்ளது.
முந்தைய ஆட்சியின்போது ஊழல் வழக்குகளில் 10 ஆண்டு களுக்கும் மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2019ஆம் ஆண்டு லண்டன் சென்று அங்கேயே தங்கி விட்டார்.
தற்போது அவரது கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.