மக்கள் ஆணை உள்ள அரசை நிறுவ வேண்டுமெனில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ரணில் – மொட்டு உறவு சிதைவடைந்து விட்டது. அதனால் அவர்கள் தலைமையிலான அரசும் செயலிழந்து விட்டது.
ஏற்கனவே மக்கள் ஆணையை இந்த அரசு இழந்துள்ள நிலையில், செத்த பிணமாகவே ஆட்சி தொடர்ந்தது. அதுவும் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மொட்டுக் கட்சியினர் சிறிதளவும் மதிக்கின்றார்கள் இல்லை. அதனால்தான் அவர் தலைமையிலான கூட்டத்தை மொட்டின் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றார்கள். இது ஜனாதிபதிக்கு வெட்கக்கேடு.
எனவே, மக்கள் ஆணை உள்ள அரசை நிறுவ வேண்டுமெனில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும்.” – என்றார்.