தெற்கு கிறீஸ் கடற்பரப்பில் நேற்றுக் காலை புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்தால் 79 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுக் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
பெலோபோனிஸ் தீபகற்பத்துக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்படகிலிருந்த 100 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கிறீஸ் கரையோர காவல்படை தெரிவித:துள்ளது.
மீட்பு நடவடிக்கைகளில் இராணுவ விமானம், உலங்குவானூர்திகள், 6 படகுகள் ஆகியன ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறீஸின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் துயரங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அறிவித்துள்ள அந்நாட்டு அரசாங்கம், 3 நாட்கள் துக்கநாட்களாக அறிவித்துள்ளது.