சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநராகப் பதவி வகித்த டிக்கிரி கொப்பேகடுவ அண்மையில் தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இந்தநிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.