டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஊடகங்கள், சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளனஇ
டியாகோ கார்சியாவில் தான் பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்- மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என்றும் அந்த ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.