மின்கட்டணம் குறைகிறது?

editor 2

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ளது தொடர்பில் இலங்கை மின்சார சபை சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த யோசனைகளை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே 0 – 30 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின் கட்டணம் 26.9 சதவீதத்தால் குறைக்கப்படும். 31 முதல் 60 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 10.8 சதவீதமும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 7.2 சதவீதமும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் யோசனைக்கு அமைய, அதிகளவான மக்கள் பயன்படுத்தும் 91 முதல் 180 வரையான அலகுகளுக்கு 3.4 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும். 180 அலகுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணத்தை 1.3 சதவீதத்தால் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Article