நீங்கள் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. பழைய வாக்குறுதிகளை – ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த பேச்சுகளில் எட்டப் பட்ட விடயங்கள் அனைத்தையும் இதுவரை நீங்கள் நிறைவேற்றாது ஏமாாற்றுகிறீர்கள் என்றும் ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தினார் என்று தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்புபுக் குறித்து அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. பழைய வாக்குறுதிகளை – ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த பேச்சுகளில் எட்டப் பட்ட விடயங்கள் அனைத்தையும் இதுவரை நீங்கள் நிறைவேற்றாது ஏமாாற்றுகிறீர்கள் என்றும் ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தினார்.
இலங்கை தமிழரசு கட்சியின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பிலேயே தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, தமிழ் மக்களின் பிரச்னைக்கு ஜூலையில் நடக்கும் பேச்சின் போது இறுதி முடிவு ஒன்றை முன்வைப்போம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அரசியல் தீர்வு, காணி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆராய குழு அமைத்துள்ளதாகவும். அவற்றின் அறிக்கை 2 மாதங்களுக்குள் கிடைத்துவிடும் என்றும், அதன் பின்னர் உறுதியான நடவடிக்கை எடுப்பேன். அத்துடன், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை இப்போதைக்கு நடத்தும் திட்டமில்லை என்றும் மாகாணங்களுக்கு இடைக்கால சபைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்று தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.