கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதங்கேணியில் பொலிஸாரின் பணிக்கு இடையூறு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.