வவுனியாவில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவருக்கு தூக்குத்தண்டனைத் தீர்ப்பு!

editor 2

வவுனியாவில் சக முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த குற்றத்துக்கு மற்றொரு முச்சக்கர வண்டி சாரதிக்கு தூக்குத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இரண்டாவது எதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டது மேல் நீதிமன்று 2013ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம் பெற்றது.

இந்த நிகழ்வு முடிந்ததும் இரவு நடந்த விருந்துபசாரத்தின் போது அங்கு கலந்து கொண்டவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் பின் அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மறுநாள் 29ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் ரயில் கட வையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து அந்த சடலம் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றும் குருதிக்கறையுடன் காணப்படுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Share This Article