காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை, கோமரன்கடவல பிரதேசத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 64 வயதுடைய பக்மீகம பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மதவாச்சி, பூனேவ – ஹல்மில்லேவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமது காணிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.