இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாகவே அமையக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வாரியபொலவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் பொருட்களின் விலைகள் குறையவுள்ளன. மின் கட்டணமும் குறைக்கப்படவுள்ளது. வட்டி வீதமும் குறைவடையவுள்ளது.
இவ்வாறு மக்களுக்குப் பல நன்மைகள் கிட்டவுள்ளன. தனி ஒருவராக நாடாளுமன்றம் வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. அவர் நாட்டைச் சிறப்பாக வழிநடத்துகின்றார்.” – என்றார்.