திருமண பந்தத்தில் இணைவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் வெலிக, மதுராகொட பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
அசிட் வீச்சுத் தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான மணப்பெண் மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மணப்பெண் சில வருடங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவரைக் காதலித்துள்ளார். பெற்றோரின் ஆலோசனைக்கமைய அந்தக் காதல் தொடர்பை அவர் நிறுத்திவிட்டார். இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே குறித்த யுவதி மீது அசிட் வீச்சு தாக்குதலை முன்னாள் காதலன் நடத்தியுள்ளார்.