பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீவி மற்றும் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதித்து ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை இராணுவ படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
எனவே இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீவி மற்றும் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதித்து ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.