புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகை தந்த நிலையிலேயே அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவந்துள்ளளார் எனத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுங்கப் பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.