வன்னியில் போர் காலத்தில் விமானம் மூலம் வீசப்பட்ட 500 கிலோ எடைகொண்ட அதிசக்தி வாய்ந்த குண்டு வெடிக்காத நிலையில் ஒன்று கிளிநொச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரம் காட்டு பகுதியிலேயே இந்தக் குண்டு கண்டறியப்பட்டுள்ளது.
3 அடி நீளமும், 3 அடி சுற்று வட்டமும் கொண்ட இந்த குண்டு 15 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை விமானப்படையின் கிபீர் விமானம் மூலம் இந்த குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இந்தக் குண்டை பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.